×

மர்மநபர்களுக்கு வலை திருப்பனந்தாள் பகுதியில் வயல்வெளி பள்ளி 25 விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் வட்டாரத்தில், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 5வயல்வெளி பள்ளிகள் நடைபெற்று வருகிறது. திருப்பனந்தாள், சிக்கல நாயக்கன் பேட்டை, முள்ளங்குடி, செருகுடி, திருமங்கைச்சேரி ஆகிய 5 கிராமங்களிலுள்ள 25 விவசாயிகள் மற்றும் 3 முன்னோடி விவசாயிகள் என மொத்தம் 28 பேருக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வயல்வெளி பள்ளியில் 25 விவசாயிகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு வயல் சூழல் ஆய்வு, மண்ணின் ஈரப்பதம், சூரிய ஒளி வெளிச்சம், வயலில் நீர் இருப்பு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றின் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.மேலும், வயலில் தீமை செய்யும் பூச்சிகள் பொருளாதார சேத நிலையின் கீழ் உள்ளதா, வயலுக்கு மருந்து தெளிக்க வேண்டுமா என்பன போன்ற முடிவுகளை விவசாயிகளே எடுக்க பயிற்சியளிக்கப்பட்டது.

இதில், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய பயிர் நோயியல் துறை இணைப் பேராசிரியர் திலகவதி, திருப்பனந்தாள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாலசரஸ்வதி, வேளாண் உதவி அலுவலர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு பயிற்சியளித்தனர்.தொடர்ந்து, இந்த வயல்வெளி பள்ளியின் மூலம் விவசாயிகள் நன்மை செய்யும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகள் பற்றி அடையாளம் காட்டப்பட்டது.மேலும், விவசாயிகளை விஞ்ஞானிகள் ஆக்குவதே வயல்வெளி பள்ளியின் நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் ரமேஷ் செய்திருந்தார்.

Tags : field school ,area ,Thiruppanandal ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது